இன்று, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் ரூ.25 லட்சம் மதிப்பிலான திரவ ஆக்ஸிஜன் கொள்கலன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைப் பெற்றது. அதனை அரசு தலைமை கொறடா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இருவரும் சேர்ந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
கும்பகோணம், அக். 5 –
கும்பகோணத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில், அரிமா தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில், அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்ஸிஜன் கொள்கலனை, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் மற்றும் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் முன்னிலையில், அரசு தலைமை கொறடா கோவி செழியன் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
தஞ்சை மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையால், கொள்ளிடக்கரை பகுதி உட்பட 195 இடங்கள் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டு அதனை தடுக்கவும், பாதிப்பு ஏற்பட்டால், அப்பகுதி மக்களையும், கால்நடைகளை காக்கவும் தேவையான முன்னச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகளின் வசதிக்காக மாவட்டம் முழுவதும் முதற்கட்டமாக தற்போது 214 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
தற்போது மழை காரணமாக ஈரபதம் மட்டும் நெல் கொள்முதல் செய்வதற்கு சவாலாக உள்ளது. என்பதால், கொள் முதலில் சிறிது தாமதம் என்பது உண்மை தான் என்றும், விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . மாவட்டத்தில் தற்போதைய புள்ளி விவரங்களில் அடிப்படையில், கொரோனா தொற்று பரவல், குறைந்து வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.