திருவாரூர், செப். 15 –
திருவாரூரில் இன்று பேரறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு வயதிலான பள்ளி மாணவ, மாணவர்கள் பங்கேற்ற மிதிவண்டி போட்டிகள் நடைபெற்றது.
தமிழகத்தின் முன்னாள முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் மிகச் சிறப்பாக தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் மாவட்ட விளையாட்டுத் துறை சார்பில் பல்வேறு வயதிலான பள்ளி மாணவ, மாணவர்களுக்கான மிதிவண்டி போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டியினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப் போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.






















