திருவாரூர், ஏப். 01 –
திருவாரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீதியகராஜர் திருக்கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் ,பெரியகோயில் என அழைக்கப்படும் வரலாற்று சிறப்பு்மிக்க திருக்கோயிலாகும்.
மேலும் இத்திருக்கோயிலின் பங்குனி உத்திர பெருவிழா கடந்த மார்ச் 9 ஆம் தேதியன்று கொடி் ஏற்றத்துடன் துவங்கி சுவாமி பல்வேறு் வாகனங்களில் வாயிலாக தினந்தோறும் வீதியுலா நடைப்பெற்றது.
மேலும், இந்த பங்குனி் உத்திர பெருவிழாவின் 24 ஆம் நாளான இன்று அருள்மிகு ஸ்ரீதியாகராஜசுவாமியின் உலக பிரசித்திபெற்ற ஆழித்தேரோட்டவிழா் இன்று் காலை வெகுச் சிறப்பாக துவங்கியது.
மேலும் இதனை முன்னிட்டு, வினாயகர், சுப்ரமணியர், தியாகராஜசுவாமியின் ஆழித்தேர், நீலோத்லாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து தேர்கள் அலங்கரிக்கப்பட்டு, அதில் தேர்குதிரைகள் கட்டப்பட்டன.
அதனைத் தொடர்ந்து நேற்று இரவு அருள்மிகு தியாகராஜசுவாமி ஆலயத்தில் இருந்து் பரிவாரங.களுடன் புறப்பட்டு தியாகராஜசுவாமி் ஆழித்தேரிலும், மற்ற சுவாமிகள் அந்தந்த்தேரிலும் எழுந்தருளினார்கள்
தொடர்ந்து் ஆழித்தேரில் தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு்பூஜைகள் நடைப்பெற்றன. பின்னர் அதிகாலை் 5 மணிக்கு வினாயகர், சுப்ரமணியர் தேர்களுக்கு் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது.
பின்னர் வினாயகர் தேரும், தொடர்ந்து சுப்பிரமணியர் தேரும் வடம் பிடிக்கப்பட்டு ஆழித்தேர் சரியாக 7.40 மணிக்கு துவங்கி தொடர்ந்து ஆழித் தேரோட்டம் நடைப்பெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடனும் ஆரூரா தியாகேசா என்ற பக்தி முழக்கத்துடன் அத்திருத்தேரின் வடம் பிடித்து இழுத்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் 1500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் லட்ச கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆழித்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.






















