பாரத பிரதமர் நரேந்திர மோடிஜியின் 71 பிறந்தநாளை சமூக நீதியின் சகாப்தம் என்று கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் மகாமக குளக்கரையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
கும்பகோணம், சென்னை.18-
சமத்துவம், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, தன்னம்பிக்கை என எண்ணற்ற பேராற்றலை கொண்ட தேசத்தின் தலைவன் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் பிறந்த நாளில் சமூகநீதி காவலன் மோடி ஜி என கூறி கொண்டாட்டினார்கள். காஷ்மீரில் 370 ஆர்ட்டிக்கல் ரத்து செய்து காஷ்மீர் மக்களின் உரிமையை நிலை நாட்டியது போல்,
இலங்கை வசமுள்ள கச்சத்தீவின் ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட தொடர்ந்து பாரத பிரதமர் அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எங்களது ஒரே லட்சியம் அகண்ட பாரதம் அமைக்க வேண்டும். ஹிந்து ராஷ்டிரம் வெல்ல வேண்டும். இந்த லட்சியம் நிறைவேறும் வரை மோடிஜி அயராது உழைப்பதற்கு அவருக்கு மன வலிமையையும் உடல் வலிமையையும் எம்பெருமான் ஈசன் தந்தருள வேண்டும். இந்திய நாட்டை பாதுகாப்பான முறையில் வழிநடத்தவும், உலக அளவில் இந்தியாவின் பெருமையை எடுத்துச் சென்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நீண்ட ஆயுளோடு நிறைந்த செல்வங்களோடு நோய்நொடி இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும்.
கொரோனா நோய்த்தொற்று இல்லா இந்தியா உருவாக வேண்டும். என்று இன்றைய தினம் மகாமக குளத்தில் உள்ள காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டு கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் அண்ணா சிலை அருகே பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் மாநில செயலாளர் பாலா தலைமை வகித்தார் குடந்தை நகர தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார் இதில் பாஜக மாவட்ட துணைத்தலைவர் சோழராஜன் பாஜக மு.நகர செயலாளர் R.G.ராஜா, அனுமன் சேனா பூசாரிகள் பேரவை மாவட்ட அமைப்பாளர் கார்த்தி மாவீரன் மஞ்சள் படை மாவட்ட செயலாளர் பரத் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.