திருவாரூர், செப். 05 –
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் இன்று மதியம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் WHV தன்னார்வலர்களை முழு நேர ஊழியர்களாக நியமித்தடவும், மாத ஊதியமாக ரூபாய் 21 ஆயிரம் வழங்கவும், வங்கி கணக்கில் மாத ஊதியத்தை வழங்கிடவும், தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாத ஊதியம் உள்ளிட்டவைகளை வழங்கிட வலியுறுத்தியும், முழக்கங்களை எழுப்பி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் அக்கோரிக்கைகளை மனுவாக வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் மணிமொழி தலைமையில் கோரிக்கை விளக்க உறையை சிஐடியு மாவட்ட செயலாளர் முருகையன் மாவட்ட தலைவர் மாலதி மாவட்ட பொருளாளர் வைத்தியநாதன் ஆகியோர் கோரிக்கை முழக்கவுரை நிகழ்த்தினார்கள்.