கும்பகோணம், ஆக. 15 –

கும்பகோணம்  மாநகராட்சியில் இன்று நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சியின் முதல் மேயர் கே சரவணன்,  துணை மேயர் சு ப தமிழழகன் மற்றும் ஆணையர் செந்தில் முருகன் முன்னிலையில் தேசிய கொடியினை ஏற்றினார்.

அப்போது மேலே ஏற்றப்பட்ட தேசியக்கொடி தலைகீழாக பறப்பதைக் கண்டு பதறிப்போய் உடனடியாக அருகில் இருந்த துணை மேயர் தமிழழகன் கொடியை விரைவாக கீழே இறக்கி, அதனை அவசர அவசரமாக சரி செய்து, மீண்டும் தேசியக்கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டது.

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் மாநகராட்சி ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மாநகராட்சியின் முதல் மேயர் சரவணன் இந்தியாவின் 75 வது பவள ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசியக்கொடியை அவர் தலைகீழாக ஏற்றிய சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here