மனைவிக்கு கார் பயிற்சி கற்றுக் கொடுக்கும் போது, அப்போது அவ்வழியில்  நடைபயிற்ச்சி சென்றுக் கொண்டிருந்த புது மாப்பிள்ளை மீது கார் மோதி பலியானார். அது குறித்த அதிர வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

செங்கல்பட்டு, செப் . 18 –

செங்கல்பட்டு அருகே மகேந்திராசிட்டி பகுதியை சேந்தவர் செல்வம் இவர் ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றார்

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு செல்வத்திற்க்கு திருமணம் நடந்துள்ளது செல்வம் மகேந்திராசிட்டி பகுதியில் தினமும் அதிகாலை நேரத்தில் நடைபயிற்ச்சி செல்வது வழக்கம்

இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி அதிகாலை நடைபயிற்ச்சி மேற்கொண்டிருந்த போது மகேந்திராசிட்டியை சேர்ந்த ஒருவர் அதிகாலை நேரத்தில் தனது மனைவிக்கு கார் பயிற்ச்சி கொடுக்கும் போது சாலை ஓரமாக நடைபயிற்ச்சி சென்று கொண்டிருந்த செல்வம் மீது மோதி விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வம் புது மாப்பிள்ளை கிசிக்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இன்று உயிரிழந்துள்ளார்

உயிரிழந்த செல்வம் உறவினர்கள் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர் புகாரின் பேரில் போலீசார் விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

நடைபயிற்ச்சி சென்றுகொண்டிருந்த செல்வம் மீது  மோதிய பதபதவைக்கும் சிசிடிவி வீடியோகாட்சி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here