திருவாரூர், மே. 01 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்

திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் அருகே உள்ள தென்குடியில் வசித்து வருபவர் ஓவியர் டாக்டர் அப்புவர்மா இவர் ஓவியர் இராஜா ரவிவர்மாவை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு ஓவியங்கள் வரைதல் கோவில் சிற்ப வேலைகள் செய்தல் போன்றவற்றை செய்து வருகிறார்.

இந்த நிலையில் வருடம் தோறும் ஓவியர் இராஜா ரவிவர்மாவின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் அன்று அவரது அப்பு வர்மா ஆர்ட் மற்றும் கேலரி ஸ்ரீ அங்காளம்மன் சக்தி பீடம் சேவா டிரஸ்ட் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தென்குடியில் இராஜாரவி வர்மாவின் 177வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு ஓவியம் யோகா சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. அந்த போட்டியினை நன்னிலம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் தொடங்கி வைத்தார்.

அதில் மாணவர்கள் யோகாசனம் பத்மாசனம் சூர்ய நமஸ்காரம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை மாணவர்கள் செய்து காண்பித்தனர். இதேபோன்று மாணவர்கள் ஓவியப் போட்டியில் பாரதியார் சிவபெருமான் இராஜாரவிவர்மா உள்ளிட்ட புகைப்படங்களை வரைந்து அசத்தினர். மேலும் அப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் சிறப்பு பரிசுகளை டாக்டர் அப்புவர்மா வழங்கினார்.

இந்நிகழ்வில் மாணவ மாணவியர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் இராஜாரவிவர்மா அவர்களின் பிறந்த நாள் விழா கேக் வெட்டியும்,  இனிப்புகள் வழங்கியும் அவ்விழாவினை வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here