கும்பகோணம், மே. 06 –
தமிழ்நாட்டில் அரசியல் கட்சியாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சி தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட கட்சியாக கடந்த 1994ஆம் ஆண்டு இதே நாளில் இக்கட்சி உதயமானது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பெயரில் முதல் வார்த்தையாக உள்ள மறுமலர்ச்சி எனும் சொல் என்பது, அண்ணா காஞ்சியில் தொடங்கிய மறுமலர்ச்சி மன்றத்தை நினைவூட்டும் வகையில் இடம் பெற்றதென ஆரம்பக்கால கட்டத்தில் அக்கட்சின் பொதுச் செயலாளர் வைகோவால் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட அவர் அக்கட்சி தொண்டர்களிடம் அதனை எடுத்துரைத்து அவர்களை எழுச்சிப்பெற செய்தார்.
இதனடையே அக்கட்சி தொடங்கி பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றித் தோல்வியென அனைத்தையும் எதிர்கொண்டு தற்போது அக்கட்சி தோன்றிய இதே நாளில் 29 ஆண்டுகளைக் கடந்து தனது 30 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
அந்நாளினைக் கொண்டாடும் விதமாக கும்பகோணத்தில் உள்ள மகாமக குளம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாநில துணைச் பொதுச்செயலாளர் முருகன், தலைமையில் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என திரளானவர்கள் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், தொடர்ந்து அப்பகுதியில் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கியும் கொண்டாடினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் முருகதாஸ், மாவட்ட பொருளாளர் இராஜசேகர், துணை செயலாளர்கள் சரவணன், காமராஜ், ஹேமாவதி, ஆதிமுலம், மாணவரணி மாநில துணைச் செயலாளர் சத்தியகுமாரன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாபு, செந்தில்,உபயதுல்லா, தொழிற்சங்க மாநில துணைச் செயலாளர் எம்எல்எப் பாலு, அவைத் தலைவர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் பழனி, கிட்டப்பா, திருநாவுக்கரசு, குமார்,கவியரசன், சொக்கலிங்கம், சரவணன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
























