கும்பகோணம், ஆக. 25 –

மத்திய அரசு இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய, 3 சட்டங்களின் சரத்துக்களை, மத்திய அரசு கடந்த 11 ஆம் தேதியன்று பார்லிமென்டில் முழுமையாக மாற்றி, ஹிந்தி மொழியில் பாரதிய நியாய ஷன்ஹிதா, பாரதிய நஹ்ரிக் சுரஷா, பாரதிய சஷய அதிநயம் சட்டம் என, தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்து அச்சட்ட திருத்தங்களை கண்டித்து  கும்பகோணம் நீதிமன்றத்தை புறக்கணித்தும், பேரணியாகவும் வந்து நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கும் போது மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் இருந்த, முப்பெரும் சட்டங்களின் பெயர்களை, மக்களுக்கு புரியாத, உச்சரிக்க இயலாத வகையில் பெயர் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்தும், மேலும் திருத்திய 3 சட்ட திருத்தங்களையும் திரும்ப பெற வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றத்தை புறக்கணிப்பு செய்து நீதிமன்றம் வழியாக முக்கிய வீதி வழியாக முழக்கங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் செயலாளர் செல்வம், பொருளாளர் ராஜா, துணைத் தலைவர் ரவி, துணைச் செயலாளர் அருள், மூத்த வழக்கறிஞர்கள் கலியபெருமாள், ஆறுமுகம், ஆறுமுகசாமி, சக்கரபாணி, முன்னாள் வழக்கறிஞர் சங்க தலைவர்கள் ராஜசேகர், சங்கர், செயலாளர் தரணி, மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை தொடர்ந்து எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here