கும்பகோணம், ஜன. 11 –
இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமிழகத்தில் சமீப காலத்தில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு உடனடியாக நிவாரணத்தை தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்-லைன் பதிவு முறையை விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். என்றும் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு ஈரப்பதம் 20% வரை கொள்முதல் செய்ய வேண்டுமென்றும் எனவும், அதுப் போன்று மேகதாதுவில் அணை கட்ட காங்கிரசார் பாதயாத்திரை நடத்துவதை கூட்டணிக் கட்சியான திமுக அதில் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்றும், மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா பகுதி பாலைவனமாக மாறும், இது விவசாயிகளுடைய பிரச்சனை மட்டுமல்ல அனைத்து மக்களுடைய பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, எனவே இதற்கு திமுக கூட்டணிக் கட்சிகள் இதனைத் தடுக்குமா எதிர்க்குமா என கேள்வி எழுப்பினார்.
கொரோனா தொற்று தற்போது விரைவாக அதிகரித்து வருவதற்காக பள்ளி கல்லூரிகள் வழிபாட்டுத் தலங்களை நான்கு நாட்கள் மூடுவது என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், டாஸ்மாக் கடைகளை மட்டும் தொடர்ந்து திறந்து நடத்துவது என்ன நியாயம் என்றும் கேள்வியெழுப்பினார். அரசு உடனடியாக அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்றும், மேலும் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்திட வேண்டும், பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு என்பது தனி நபருடைய பிரச்சனை அல்ல இது நாட்டினுடைய பிரச்சனை என்றும் என்பது போன்ற பல்வேறு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அரசு கொடுத்த வாக்குறுதிகளை 100% நிறைவேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கடந்த அரசு பொங்கலுக்கு நிதி வழங்கியது போல் இந்த அரசும் நிதி வழங்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். அது அவர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. என கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் தெரிவித்தார்.





















