மயிலாடுதுறை, மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
தமிழ்நாட்டில் தெற்கு கடற்கரையோரம் கள்ளக் கடல் என்ற நிகழ்வு நேற்று நடைபெறும் என்று வானிலை ஆய்வு துறை எச்சரித்து இருந்தது. கடலில் திடீர் திடீரென்று சூறாவளி தோன்றும் என்றும் 45 முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்று வீசி 5 அடி உயரத்திற்கு அலைகள் கரையை தாக்க கூடும் அதனால் கரையில் சேதம் ஏற்படும் எனவும் மேலும் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கடலில் குளிக்க வேண்டாம் என்பது போன்ற பல்வேறு வகையிலான எச்சரிக்கையை மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
மீன்பிடி தடைக்காலம் என்பதால் மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த 28 கிராமங்களில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் விசைப்படகு மூலம் மீன்பிடிக்க செல்லவில்லை அதே நேரம் பைபர் படகு மீனவர்கள் ஆபத்தை உணராமல் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ன்றர்.
மேலும் தரங்கம்பாடி பூம்புகார் உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


















