திருவண்ணாமலை செப்.18-
திருவண்ணாமலையில் புதியதாக ரூ.50 லட்சம் மதிப்பில் ரவுண்டானா அமையவுள்ள இடத்தினை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை – வேலூர் நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிக்காக ஆய்வு மேற் கொள்ள வந்த அமைச்சர் அங்கிருந்த பழைய அண்ணா நூற்றாண்டு வளைவு அருகில் ரூ.50 லட்சம் மதிப்பில் நெடுஞ்சாலை துறை சார்பில் ஈசான்யம் அருகே ரவுண்டானா அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான இடத்தினை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர், புதியதாக அமையவுள்ள அண்ணா நூற்றாண்டு வளைவு குறித்தும் வரைபடங்களை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஆய்வின் போது நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் முரளி, சி.என்.அண்ணாதுரை எம்பி, திமுக மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன், நகர செயலாளர் பா.கார்த்திக்வேல்மாறன், மற்றும் நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.