திருவாரூர், ஆக. 25 –

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் ஊராட்சியில் 1 மாதத்திற்கும் மேலாக குப்பை அகற்றப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயத்துடன் வசிப்பதாக அவ்வூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பிரச்சினைக் குறித்து ஆய்வு நடத்தி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என அவ்வூராட்சியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது அடியக்கமங்கலம் ஊராட்சியாகும். மேலும் அங்கு 2000 – க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், திருவாரூர் நாகை நெடுஞ்சாலையில் இவ்வூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப் படும் அனைத்து வகையிலான கழிவுக் குப்பைகளை கொட்டி வைக்கும் குப்பை கிடங்கு உள்ளது.

மேலும் அக்குப்பைக் கிடங்கு வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே இருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருவதாகவும், மேலும் அக்கழிவுகளை ஊராட்சி சார்பில் தீயிட்டு கொளுத்துவதால் அதில் எழும் புகை, வாகனத்தில் செல்வோருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கும் மூச்சுத் தினறல் மற்றும் பல்வேறு சரும நோய்களை உருவாக்கி வருவதாகவும் மேலும் அவ்வூர்மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தொடர்ந்து அப்பிரச்சினைக் குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் எழுத்து மற்றும் வாய் வார்த்தை மூலமாக புகார் தெரிவித்து அப்பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கை ஆள் நடமாட்டம் இல்லாதப் பகுதிக்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அப்பிரச்சினைக் குறித்து ஊராட்சி மன்ற தலைவருக்கும் அவ்வூர் மக்களுக்கும் முரண்பாடுகள் எழுந்ததாகவும் அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

இந்நிலையில்தான் அவ்வூர் ஊராட்சி நிர்வாகம் ஒரு மாதத்திற்கும் மேலாக குப்பைகளை அள்ளாமல் அப்படியே போட்டு வருவதாகவும் மேலும் அதனைத் தொடர்ந்து அவ்வூர் மக்கள் போராட்டங்களை நடத்தி வருவதாகவும், இருப்பினும் அதனையும் அலட்சியப் போக்கோடு நடந்து வருவதாகவும் மேலும்தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக அவ்வப்போது பெய்து வரும் கன மழையால் அக்குப்பைகளில் எழும் துற்நாற்றம் மற்றும் ஈ மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகி உணவு மற்றும் குடிநீருக்காக பயன் படுத்தப்படும் இணவுப் பொருட்கள் மீதமர்ந்து பெருத்த தொல்லைகளை ஏற்படுத்தி வருவதாகவும் மேலும் அதனால் அவ்வூராட்சி பகுதிகளில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்படும் சூழல் நிலவி வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மக்களின் அடிப்படை சுகாதாரம் குறித்து அலட்சியப்போக்குடன் நடந்துக் கொள்ளும் அடியக்கமங்கலம் ஊராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் எனவும், மேலும் அப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அவ்வூர்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகமும் இப்பிரச்சினையில் அலட்சியம் காட்டும் நிலையில் அவ்வூர் மக்களின் மிகப்பெரிய போராட்டத்தை உள்ளூர் மற்றும் மாவட்ட நிர்வாகம் எதிர் கொள்ள நேரிடும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

பேட்டி: நவாஸ்

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here