கும்பகோணம், நவ 24

கும்பகோணத்தில் சாரங்கபாணி சுவாமி சன்னதி தெருவில் உள்ளது நகராட்சி வணிக வளாக கட்டடம் அதில் உள்ள மாடியில் இருந்து அருகில் உள்ள அரசு நூலக கட்டிட மாடிக்கு தாவ முயன்ற போது கணபதி (40) என்பவர்  தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்துக்குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூரில் உள்ள நத்தம் கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் கணபதி (40 )இவர்  கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு செல்லாமல் சாரங்கபாணி சன்னதி தெருவில் உள்ள நகராட்சி வணிக வளாக கட்டிடம் மாடியில் வாடகைக்கு  தங்கி வருகிறார்.

இந்நிலையில் இன்று அதிகாலை நகராட்சி வணிக வளாக மாடியில் இருந்து, நூலக கட்டிட மாடிக்கு தாவ முயன்ற போது கால் தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே கணபதி உயிரிழந்தார். இன்று காலை கணபதி நடமாட்டத்தை காணாததால் அவரது தாய் அப்பகுதியில் தேடிப் பார்த்தபோது கணபதி இறந்து கிடந்தது தெரியவந்தது . தகவலறிந்து,  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிழக்கு காவல் துறையினர்  வழக்குப்பதிவு செய்து மரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து கணபதியின் உடல் உடற்கூறாய்வுக்காக  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here