கும்பகோணம், நவ. 24 –
கும்பகோணத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சம்மேளன சிஐடியு தொழிற் சங்கம் சார்பில் அரசு போக்குவரத்து கழக வாயில் முன்பு மத்திய சங்க துணைத் தலைவர் அழகிரிசாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் போக்குவரத்து கழகங்களின் பற்றாக்குறையை ஈடுகட்ட வரவுக்கும் செலவிற்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வழங்க வேண்டும். ஊதிய பேச்சுவார்த்தை உடனே துவங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு, உள்ளிட்டவைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும். அதிகாரிகளின் அடாவடிக்கு முடிவு கட்ட வேண்டும். இந்தக் கோரிக்கை புதியவை அல்ல தொழிற்சங்க கூட்டமைப்பு இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 7 ஆண்டுகளில் 4 வேலை நிறுத்தங்கள் காத்திருப்புப் போராட்டம், கோட்டை முற்றுகை மட்டுமின்றி என்னற்ற ஆர்ப்பாட்ட போராட்டங்களை ஏற்கனவே நடத்திவுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என தொழிலாளர்கள் ஆவலுடன் காத்திருந்தனர் 6 மாத காலம் ஆன பின்பும் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கவில்லை, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது தமிழகத்தில் ஆட்சி மாறி விட்டது ஆனால் தொழிலாளர்களின் அவலங்கள் மாறவில்லை அதிகாரிகளின் அடாவடியும் குறையவில்லை அடுத்த ஒப்பந்தமும் 10 மாதத்தில் வந்துவிடும் இனியும் அரசு தாமதிக்காமல் பேச்சுவார்த்தையை துவக்கி பிரச்சினைகளை தீர்க்க முன் வரவேண்டும். எனதெ தெரிவித்தனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சம்மேளன துணை தலைவர் கண்ணன் மத்திய சங்க தலைவர் மணி மாறன் மத்திய சங்க பொருளாளர் வெங்கடாஜலபதி மத்திய சங்க பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் இணைச்செயலாளர்கள் பகத்சிங் மாரியப்பன் மத்திய சங்க துணை செயலாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.