மதுக்கூர், ஜன. 09 –
மண்ணின் வளத்தை மேம்படுத்துவதில், முக்கிய பங்கு வகிக்கும் பசுந்தாள் உர பயிர் குறித்து, ஓலய குன்னம் கிராமத்தில் நேற்று வேளாண் உதவி இயக்குநரின் நேரடி பயிற்சி உழவர் வயல்வெளிப் பள்ளியில் நடைப்பெற்றது.
தமிழ்நாடு நீர்வளம் மற்றும் நிலவளம் திட்டத்தின் கீழ், நேற்று ஒலயகுன்னம் கிராமத்தில், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பற்றிய வயல்வெளி பள்ளி பயிற்சி 25 விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் முருகேஷ் ஆகியோர் நடத்தினார்கள்.
மேலும், இப்பயிற்சியில் விவசாயிகள் பசுந்தாள் உர பயிர்களை பற்றியும், அதனை வயலில் இடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், வேளாண் உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு வயல்வெளியில் நேரடியாக பயிற்சி அளித்தார்.
இப் பயிற்சியின் போது, அனைத்து விவசாயிகளையும் வயல்வெளியில் பசுந்தாளுரமாக பயிரிடப்படும் பயிர்களையும், பசுந்தாளுரமல்லாத பிற பயிர்களையும், அப்பகுதி நிலத்தில் இருந்து பிடுங்கி வரச் செய்தனர்.
மேலும், பயறு வகை பயிர்களைச் சேர்ந்த பசுந்தாள் உரமான கொழுஞ்சி, சணப்பு, தக்கை பூண்டு போன்ற வேர்களில் உள்ள வேர் முடிச்சுகள் இருப்பதை விவசாயிகளை நேரடியாக பார்வையிட்டுத் தெரிந்து கோள்ளச் செய்தனர்.
மேலும் இவ்வேர் முடிச்சுக்களின் வாயிலாகத்தான் பயிருக்கு தேவையான தழைச்சத்தை காற்றில் இருந்து கிரகித்து பயிருக்கு இயற்கையாக தழைசத்தை வழங்குகின்றன எனவும் அப்போது வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் விவசாயிகளிடத்தில், தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு டிபன் பாக்ஸ்களில் தேவையான உணவை வைத்து பள்ளிக்கு அனுப்புவது போல பயறு வகை பயிர்களில் உள்ள வேர் முடிச்சுகள் பயிருக்கு தேவையான தழைச்சத்து அளிக்கும் டிபன் பாக்ஸாக செயல்பட்டு தேவையான உணவை தேவையான நேரத்தில் அளிக்கின்றன.என அப்போது உவமையுடனும் விவசாயிகள் எளிமையாக புரிந்துக் கொள்ளும் படி எடுத்துரைத்தார்.
முக்கியமாக கவனிக்க வேண்டியது பசுந்தாள் உரபயிர்கள் 30 -35 நாட்களில் பூ பூத்து விடும். எனவும் மேலும், பூ பூத்த உடனையே அவற்றை வயலில் மிதித்து உழுது விட வேண்டும். எனவும்,
மாறாக, காய் வைக்கும் வரை பசுந்தாள் உர பயிர்களை வளர்த்தால், அப்பயிர் வேர் முடிச்சுகளில் உள்ள தழைச்சத்தை தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளும்.எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்நிலையில் அவற்றை நாம் மண்ணில் மடக்கி விடும் போது. அவற்றில் உள்ள கரிம சத்து மட்டுமே சேரும் எனவும், தேவையான தழைச்சத்து கிடைக்காது. என அப்போது தெரிவித்தார்.
விவசாயிகள் கருத்தில் கொண்டு சனப்பு தக்கை பூண்டு கொளுஞ்சி போன்ற எந்த வகையான பசுந்தாள் பயிரைப் பயன்படுத்தினாலும், 30 35 நாட்களில் பூ பூத்தவுடன் வயலில் மடக்கி உழுது விட வேண்டும்.என தழைச்சத்தின் முக்கியம் கருதி மீண்டும் விவசாயிகளிடம் எடுத்துரைத்தார்.
மேலும், மஞ்சள் பூக்கள் அதிகம் பூக்கக்கூடிய இந்த பசுந்தாள் பயிர்கள், நன்மை செய்யும் பூச்சிகளையும் அதிகமாக ஈர்க்கக் கூடியது எனவும், இதனால் வயலின் சூழல் மாறும். எனவும், மேலும் இதனால் இயற்கைச் சூழல் பாதுகாக்கப்படும். என்றார்.
மண்ணில் மடக்கி உழுவதால் பசுந்தாலும், மக்கி உருவாகும் கரிம அமிலமானது மண்ணின் உப்பு சத்தினை மாற்றக்கூடியது எனவும், இது மண்ணில் கரிமசத்தின் அளவை அதிகரிக்கிறது என்றார்.
மேலும், மண்ணில் தழைச்சத்தின் அளவை கூட்டுகிறது இதனால் விவசாயிகள் 50 சதவீதம் வரை ரசாயன உரங்கள் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த முடியும். எனவும், இதனால் மண்ணின் கட்டமைப்பும் மாற்றப்படுவதாகவும், மண்ணில் கனிமச் சத்தினைச் சேர்ப்பதற்காக, நமது மதுக்கூர் வட்டார உழவர்கள் பயறு வகைப்பயிர் குடும்பத்தைச் சார்ந்த பயிர்களை வயலில் விதைத்து, அவை நன்கு வளர்ந்தவுடன், பூப்பதற்கு முன், வயலில் நன்கு மடக்கி உழும் பழக்கமும் ஏற்கனவே உள்ளதாக அப்போது தெரிவித்தார்.
மேலும் விவசாயிகள் தற்போது இதனை நேரடியாக தெரிந்து கொண்டதால், அவர்கள் இனி வரும் காலங்களில் ரசாயன உரங்களினால் ஏற்படும் இயற்கை சூழல் கெடுவதை கருத்தில் கொண்டு, பசுந்தால் பயிர்களுக்கும், இயற்கை உரங்களையும் பயன்படுத்துவதென இப் பயிற்சிப் பள்ளியில் உறுதி எடுத்துக் கொண்டனர்.
பயிற்சிக்கு தேவையான ஏற்பாடுகளை ஒலயகுன்னம் முன்னோடி விவசாயி அழகிரி மற்றும் மகளிர் குழு உறுப்பினர் விமலா மற்றும் கீதா ராமன் ஆகியோர் செய்திருந்தனர்.




















