ராமநாதபுரம், சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி ) குரூப் 4 தேர்வுக்கான இலவச முழு மாதிரி தேர்வு ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய சுரேஷ் அகாடமி வளாக மையங்களில் இன்று (24.8.2019 ) காலை 9:30 மணி அளவில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் வளாக தேர்வில் மட்டும் 800க்கும் மேற்பட்ட இளையோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். சுரேஷ் அகாடமி நிறுவனர் சுகேஷ் சாமுவேல் அறிவுறுத்தல் படி கண்காணிப்பாளர்கள் தேர்வை கண்காணித்தனர். சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 (நேர்முகத் தேர்வில்லாதது) தேர்வுக்கான இலவச அறிமுக வகுப்பு : 08.9.2019 அன்று காலை 9:30 மணி அளவில் நடைபெற உள்ளது . கூடுதல் விவரங்களுக்கு 75503 52916, 75503 52917 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சுரேஷ் அகாடமி தெரிவித்துள்ளது.