கூத்தாநல்லூர், பிப். 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வந்த நிலையில், அங்கு போதுமான கட்டிட வசதி இல்லாத காரணத்தினால், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட சிகிச்சைக்கு வரும் பிற நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வந்தனா்.

அதனால் அப்பகுதியில் போதுமான கட்டட வசதிகளுடன் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வேண்டும் என கூத்தாநல்லூர் பகுதி பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் நகர்மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தனர்.

அக்கோரிக்கைகளின் அடிப்படையில் தமிழக சுகாதாரத் துறை சார்பில்  15-வது நிதிக்குழு சுகாதார மானியத்தில் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதனைத் தொடா்ந்து புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நடும் விழா இன்று அங்கு துவங்கப்பட்டது. அந்நிகழ்வில் பங்கேற்ற நகரமன்ற தலைவர் அடிக்கல் எடுத்துக் கொடுத்து, கட்டட கட்டுமானப் பணியை  பாத்திமா  பஷிரா தெடங்கி வைத்தார்.

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற இத்துவக்க விழாவில் சுகாதாரத்துறை அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அப்பகுதிமக்கள் என திரளானவர்கள் அவ்விழாவில் பங்கேற்று விழாவினை மேலும் சிறப்பித்தனர்.

மேலும் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தினை இப்பகுதியில் அமைத்திட்ட தமிழக அரசு மற்றும் சுகதார துறைக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here