கும்பகோணம், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநரில் அனைத்துக் கட்சியினர் சார்பில் மனதச் சங்கிலிப்போராட்டம் நடைப்பெற்றது.. அதில் திமுக தேர்தல் அறிக்கையில் நூறு நாட்களில் என்றார்கள் ஆயிரம் நாட்களை கடந்து விட்டது இன்னும் வருவாய் மாவட்டமாக ஆகவில்லை கும்பகோணம் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நினைவூட்டுவதற்காக நடத்தப்படும் போராட்டாம் என்றார்கள் அதில் பங்கேற்ற அனைத்துக் கட்சி தலைவர்கள்.
மேலும் அம் மனித சங்கிலிப் போராட்டம் மகாமக குளம் சுற்றிலும் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஒருவரோடு ஒருவராக கையைப் படித்து கொண்டு முழக்கமிட்டபடியே மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
திமுக தனது தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில், தற்போதைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தனது தேர்தல் பிரச்சார சுற்றுபயணத்தில், ஒரத்தநாடு மற்றும் திருக்கடையூர் பகுதியில் நடைபெற்ற கூட்டங்களில், கழக ஆட்சி அமைத்த பிறகு, நூறு நாட்களில் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்குவோம் என்ற உறுதியளித்தார்.
ஆனால் தற்போது ஆட்சி அமைத்து 1000 நாட்களை கடந்த பிறகும் இதனை கண்டுகொள்ளவில்லை எனவே அவருக்கு நினைவூட்டும் வகையில், அனைத்து கட்சி நிர்வாகிகள் மகாமகம் குளம் சுற்றி ஆயிரக்கணக்கானோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த மனித சங்கிலி போராட்டம் ஒருங்கிணைப்பாளர் ம.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், முன்னாள் மாவட்ட செயலாளர் சங்கர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மாநில துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி, மூவேந்தர் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர்கள் செல்லப்பாண்டி, ஐயப்பன், தமிழ் மாநில காங்கிரஸ் மாநகர தலைவர் பி.எஸ் சங்கர், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சதீஷ்குமார், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் முல்லை வளவன், தஞ்சை புதுக்கோட்டை மண்டல செயலாளர் சதாசிவக்குமார், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், வர்த்தக சங்கம், கே. எஸ் சேகர், சமத்துவ மக்கள் கட்சி, மாவட்ட செயலாளர் ராஜா, விடுதலை தமிழ் புலிகள் கட்சி, நிறுவன தலைவர் குடந்தை அரசன், மாவட்ட செயலாளர் தை சேகர், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்மணி செந்தில், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஆனந்த், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள்,சமூக ஆர்வலர்கள், கலந்து கொண்டனர். இதில் பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் தமிழ்வாணன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் மதிவிமல், ராம்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்கள் முருகானந்தம், சந்தானம், தமிழ் மாநில தேசிய லீக் பொறுப்பாளர் ஹாஜாமைதீன், மற்றும் அனைத்துக்கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.






















