கோயம்பேடு, ஏப். 05

சென்னை  கோயம்பேட்டில் உள்ள சட்டம்& ஒழுங்கு காவல் நிலைய வளாகத்தில்  நேற்று புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த கோயம்பேடு காவல்  மாவட்ட துணை ஆணையாளர் குமார்  ரிப்பன் வெட்டி அக்காவல் நிலையத்தைத் திறந்து வைத்தார்.

மேலும் இக்காவல்நிலயத்தின் புதிய பொறுப்பு ஆய்வாளராக உமா மகேஸ்வரி பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் இக் காவல் நிலையத்தில் அவருடன் மூன்று தலைமை காவலர்களும்,  இரண்டு முதல் நிலை காவலர்களும், மூன்று காவலர்களும் பணி நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளனர்.

மேலும் இவ்விழாவில் கோயம்பேடு உதவி ஆணையர் ரமேஷ்பாபு,  ஆய்வாளர் ரமேஷ்கண்ணா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் அனைவரும் புதியதாக இக்காவல்நிலையத்திற்கு பொறுப்பேற்றுவுள்ள ஆய்வாளர்,  காவலர்களுக்கு காவல் துறை உயர் அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் இக்காவல் நிலையம் கோயம்பேடு , நெற்குன்றம், ஜெய்நகர் மற்றும்  ஜெயராம் நகர்  உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை காவல் எல்லையாக கொண்டு செயல்படும் என்றும், மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அளித்திடும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டார தகவல் தெரிவிக்கிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here