திருவள்ளூர், பிப். 14 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்த தொகுதிக்குட்பட்ட காக்களூரில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான காலைஞர் நூற்றாண்டு நினைவு விழாவினை முன்னிட்டு ரூபாய் 67.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு புதிய கிளை நூலகத் திறப்பு விழா நேற்று நடைப்பெற்றது. அதனை முன்னாள் அமைச்சரும், திமுக  மாவட்டச் செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் திறந்து வைத்தார்.

பூவிருந்தவல்லி தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளூர் ஒன்றியம் காக்களூரில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற மேம்பாட்டு நிதி மற்றும் மாவட்ட நூலக நிதிலிருந்து ரூபாய் 67.50 லட்சம் மதிப்பீட்டில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு புதிய கிளை நூலக கட்டிடம் திறப்பு விழாவானது ஒன்றிய கவுன்சிலர் த.எத்திராஜ் ஏற்பாட்டில் நடைபெற்றது.

அச்சிறப்புமிகு விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்டச் செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் எம்.எல்.ஏ கலைஞர் நூற்றாண்டு நினைவு புதிய கிளை நூலகத்தை ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. முன்னிலையில் திறந்து வைத்தார். தொடர்ந்து நூலகத்தை பார்வையிட்டார். உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.ரமேஷ், மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் சி.ஜெரால்டு, ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன், மாவட்ட கவுன்சிலர் டி.தென்னவன், உள்ளிட்ட பலர் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here