தஞ்சாவூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு
தஞ்சை மாவட்டம், உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தஞ்சை மட்டுமல்லாது பிற மாவட்டங்கள் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணிகள், பக்தர்கள் என தினந்தோறும் அதிகமாக வருகை புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சை பெரிய கோவில் சோழன் சிலை பின்புற அகழியில் இன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. அதனால் உடனடியாக பொதுமக்கள் தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் தஞ்சை மாநகராட்சி பணியாளர்கள் நீண்ட நேரம் போராடி தண்ணீர் பீச்சி அடித்து தீயை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.



















