மன்னார்குடி, மார்ச். 10 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேவுள்ள சேரன்குளம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கடாஜலபதி திருக்கோயில் உள்ளது. அத்திருக்கோயிலின் குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு, அக்கோயிலில் புணரமைப்பு பணி நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் திருவாரூர் அருகேவுள்ள சோழங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பட்டியல் எழுத்தராக பணியாற்று வரும் அறிவழகன் மற்றும் அவரது மனைவி சுதா ஆகியோருடைய மூத்த மகன் அரவிந்த் பொறியியல் பட்டதாரி ஆவார்.

மேலும் அவர் சென்னையைச் சேர்ந்த தனியார் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். மேலும் அந்நிறுவனம் சேரன்குளம் வெங்கடாஜலபதி கோவில் திருப்பணிகளை எடுத்து செய்து வருகிறது. மேலும் அப்பணிக்காக அரவிந்த் உள்ளிட்ட அந்நிறுவனத்தில் பணிப்புரியும் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்காக சேரன்குளம் அக்கிராமத்தில் உள்ள மடத்தில் தங்கி பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை மடத்தின் மாடியில் ஒருவர் தூக்கிட்டு தொங்குவதாக மன்னார்குடி காவல்துறைக்கு அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மர்ம்மான முறையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தவர் திருவதிரைமங்கலம் ஊராட்சி சோழங்கநல்லூர் மேலதெருவை  சேர்ந்த அரவிந்தன் என தெரிந்து கொண்டனர்.

மேலும் அரவிந்தன் இறப்புக் குறித்து அவரது தந்தைக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் அரவிந்த் உடலை பார்த்து கதறிஅழுதனர். மேலும் அச்சம்பவம் குறித்து மன்னார்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

இறந்த அரவிந்த் உடலை பிரேத பரிசோதனைக்கு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரவிந்த் தற்கொலை செய்து கொண்டாரா ? இல்லை அவரை வேறுயாரேனும் அடித்து கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்க விட்டனரா, என்ற பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை மேற் கொண்டு வருகின்றனர்.

மேலும் அரவிந்த் இறப்பு குறித்து அவர் தந்தை கூறும் போது மகன் பொறியியல் படித்துவிட்டு  சென்னையில் உள்ள தனியார் கன்ஸ்ட்ரக்ஷனில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் இறந்த சம்பவம் என்னால் நம்ப முடியவில்லை எனவும், மேலும் என் மகனை யாரோ எதற்காகவோ அடித்து கொலைதான் செய்துவிட்டார்கள் என கதறியப்படி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

பேட்டி –

அறிவழகன்            இறந்தவரின் தந்தை

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here