திருவிடைமருதூர், பிப். 11 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …

அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் அரசியலில் நல்ல விதமாக செயல்படுவார் என நம்புவதாக செய்திளர்கள் எழுப்பியஅடுக்கடுக்கான கேள்விகளுக்கு ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ பதிலளித்தார்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில் நேற்று ம.தி.மு.க சார்பில் தஞ்சை மண்டல தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆடுதுறை முருகன், தலைமையில் தனியார் மஹாலில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் தஞ்சை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டம், திருவாரூர் மாவட்டம், நாகை மாவட்டம், காரைக்கால், ஆகிய பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டு முதல் கட்டமாக ரூ.50 லட்சம் நிதியை ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோவிடம் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துரை வைகோ.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்து வந்ததை திராவிட இயக்கத்தை சேர்ந்தவனாக சந்தோஷப்படுகிறேன் என்றார். செய்தியாளர்கள் எழுப்பிய தேர்தல் கூட்டணியில் இட ஒதுக்கீடு பற்றிய எழுப்பிய கேள்விக்கு கடந்த முறை எங்களுக்கு ஒரு லோக்சபாவும் ஒரு ராஜ்யசபா ஒதுக்கப்பட்டது. இம்முறை கூடுதலாக இரண்டு லோக்சபாவும் ஒரு ராஜ்யசபாவும் கேட்டுள்ளோம் எனவும் மேலும் கூட்டணி தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவோம் எனவும் அதே நேரத்தில் சுமூகமான முடிவையும் எதிர்பார்க்கிறோம் எனவும் அப்போது அவர்தெரிவித்தார்.

தொடர்ந்து முதலமைச்சர் இப்போதுதான் வெளிநாட்டு அரசு சுற்றுப்பயணம் முடித்துவிட்டு வந்துள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடரும் தொடங்க உள்ளது. எனவே இன்னும் பத்து நாட்களுக்குள் தொகுதி பங்கீடு முடிவாகும் என எதிர்பார்க்கிறோம் என்று துரைவைகோ குறிப்பிட்டார்.

மேலும் ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிர்வரும் நாடளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் பாஜகவிற்கு நல்ல பாடம் புகட்டும் தேர்தலாக அதுஇருக்கும் என்ற அவர் தொடர்ந்து சென்னை புயல் பாதிப்பு மற்றும் தென் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை சீர்செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட ரூ.37 ஆயிரம் கோடியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை என்றார்

அதேபோல் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் பணிக்காக தமிழக அரசு கேட்ட நிதி ரூ.63 ஆயிரம் கோடி ரூபாயயும் இதுவரை வழங்காததால் தமிழக அரசே செலவு செய்து மெட்ரோ ரயில் பணியை தொடங்கி உள்ளது என்றார்.

இதுப்போன்று தமிழகம் மட்டுமின்றி பாஜகவை எதிர்க்கின்ற எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு நிதி கொடுக்காமலும், கடன் கேட்டால் மறுப்பு தெரிவிப்பதும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் அங்குள்ள ஆளுநர்களை வைத்து இணை அரசு ஒன்றை மத்திய அரசு நடத்திக் கொண்டிருக்கிறது என்றார். அதற்கெல்லாம் பாடம் புகட்டும் ஒரு தேர்தலாக தான் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் அமையும் என்றார்.

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை கொண்டுவர வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டிற்கு விமோசனம் கிடைக்கும் என்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடு அதனை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

ஒன்றியத்தில் பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்ற காலத்திலிருந்து இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது அதிகரித்துள்ளது என்ற அவர் அதுக்குறித்து ஒன்றிய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் அவர்கள் தொடர்ந்து அலட்சியப் போக்கை கடைப்பிடிப்பதால் எதிர் கட்சிகள் அனைத்தும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அலுத்து விட்டோம் என்ற அவர் அதற்கு பாடம் புகட்ட வேண்டிய தருணம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் பாஜகவிற்கு பாடம்புகட்ட வேண்டும் என்றார்.

மேலும் சகோதரர் விஜய் உழைப்பால் உயர்ந்தவர். அவர் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்துள்ளார். நேரடி அரசியலுக்கு வந்து தமிழக மக்களுக்காக உழைப்பதற்கு முன்வந்துள்ளார். அடுத்து அவருடைய திட்டங்கள் மற்றும் கொள்கைகளை அறிவிக்கட்டும். அரசியலில் நல்ல விதமாக செயல்படுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் ஸ்டாலின், தமிழ்ச்செல்வன், ராமஞ்சேரி ஸ்ரீ தரன், பாலச்சந்திரன், கொளஞ்சி, அம்பலவாணன், கழக பொருளாளர் செந்திலதிபன், இளைஞரணி மாநில செயலாளர் ஆசைத்தம்பி, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here