திருவள்ளூர்; செப், 08- திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் உயர்ந்தல், கல்வி கற்பித்தல், பாதுகாப்பு வழங்கல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவற்றில் இம் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல் பட்டதற்காக டெல்லியில் 6.9.2019 அன்று நடைப்பெற்ற விழவில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் அத்துறை அமைச்சர் ஸ்மிருதி சுமின் இராணி மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி இரவிக்குமாருக்கு பாராட்டு சான்றிதழையும் கேடயத்தையும் வழங்கி அவரை பெருமைப்படுத்திவுள்ளார்.
இந்தியாவில் பெண்குழந்தைகளின் பிறப்பு சதவீதம் ஆண் குழந்தைகள் 1000 – 943 ஆக குறைந்து வருவதை கண்டறிந்து ஹரியானா மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டு பெண் குழந்தைகளை பாதுகாப்போம் கல்வி கற்பிப்போம் என்ற திட்டம் பானிபட் என்ற வட்டாரத்தில் தொடங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் குழந்தைகள் பிறப்பு சதவீதம் குறைந்த திருவள்ளூர் மாவட்டம் உட்பட பத்து மாவட்டத்தில் இத்திட்டம் 2018 இல் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், கல்வி கற்பிப்போம் திட்டம் துவங்கப் பட்டது.
இத்திட்டத்தில் பலதுறைகள் முனைப்பாக சமூகநலத்துறை,சுகாதாரத்துறை,பள்ளிக்கல்விதுறை,மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஒன்றாக இணைந்து மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் சமுதாயத்தில் பெண் குழைந்தைகளின் அவசியத்தை வழியுறுத்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளான விழிப்புணர்வு பேரணி , மனிதசங்கிலி, கையெழுத்து இயக்கம், உறுதிமொழியேற்பு, மினிமாராத்தான்,பெண் குழந்தைப் பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு பாராட்டுச் சான்றுயிதழ் வழங்குதல் உள்ளிட்ட பல விழிப்புணர்வுகளையும், பெண் குழந்தையை பாதுகாப்போம், கல்வி கற்பிப்போம் BBBP -2020 பள்ளி மாணவர்களைக் கொண்டு லோகோ வடிவமைத்தல் பஞ்சாயத்து அளவிலான ஆண், பெண் விகித தகவல் பலகை வைத்தல், ஸ்கேன் செண்டர்களில் கருவிலிருக்கும் பாலின கண்டறிதல் தடுத்தல் நடவடிக்கை, களப்பணியாளர்களுக்கான பயிற்சி அளித்தல், சமுதாய வளைகாப்பு மூலம் பெண் குழந்தைகளை ஊக்குவித்தல் வீடு வீடாக சென்று ஒட்டு வில்லகளை ஒட்டி பிரச்சாரம் செய்தல், போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல், குழந்தைகளின் பிறந்த நாளை கொண்டாடுதல், சிறப்பு கிராம சபைக்கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தியதால் இம் மாவட்டத்தில் 2015 கணக்கெடுப்பின் படி பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் 916 ஆக இருந்தது. அது 2018 ல் 963 ஆக உயர காரணமாக இருந்ததைப் பாராட்டி இம்மாவட்டத்தில் BBBP திட்டத்தை மிகச்சிறப்பாக செயல்படுத்திய மாவட்டம் திருவள்ளூர் என அறிவிக்கப் பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி இரவிக்குமாருக்கு மத்திய அரசு சார்பில் பாராட்டுச் சான்றிதழும், கேடயமும் வழங்கப் பட்டுள்ளது.