கும்பகோணம், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணத்தில் உயர் பதவிக்கு வந்தாலும் பழைய தொழிலை மறக்காமல் ஆட்டோ ஓட்டுனர் சீருடையில் மே தின கொடியேற்றிய மேயர். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
கும்பகோணத்தில் ஆண்டுதோறும் மே மாதம் 1ஆம் தேதி உழைப்பாளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உழைப்பாளர்களை நினைவுக் கூறவும், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிப்பதுதான் இந்த நாளின் நோக்கமாகும்.
அதன்படி, நேற்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஆட்டோ ஓட்டுனராக இருந்த கும்பகோணம் மாநகராட்சி மேயராக உயர் பதவிக்கு வந்தவர் சரவணன் அவர் தனது பழைய தொழிலை மறக்காமல் ஆட்டோ ஓட்டுனருக்கான சீருடை அணிந்தப்படி சிஐடி தொழிற்சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சங்க கொடியேற்றினார்.
மேயராக பதவி வகித்தாலும் தனது பழைய ஆட்டோ ஓட்டுனர் தொழிலை மறக்காமல் அந்த சீருடையிலேயே வந்து மே தினம் கொடியேற்றிய மேயர் சரவணனுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மேலும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு மனோகரன், சாலை போக்குவரத்து மாநில பொருளாளர் பார்த்தசாரதி, ஆட்டோ சங்க கௌரவத் தலைவர் செந்தில் குமார், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் மே தின கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.



















