தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக-வின் முன்னாள் பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவிற்கு இன்று பிறந்த நாளாகும். அவரது படத்திற்கு அதிமுக-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து மோடி தனது டுவிட்டரில் ‘‘தமிழக வளர்ச்சிக்கு ஜெயலலிதா ஆற்றிய பங்களிப்பு தலைமுறைகளை கடந்தும் நினைவில் நிற்கும்; அவர் கொண்டு வந்த திட்டங்களால் எண்ணற்ற ஏழைகள் பயனடைந்துள்ளனர்’’ என்று பதிவிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here