திருவண்ணாமலை, செப் . 17 –
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நில உரிமையாளர்களுக்கு தங்களின் நீண்ட நாளிட்ட நிலப்பட்டா மாறுதல் குறித்த கோரிக்கையின் விளைவாக வரும் செப் 22 ல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு பட்டா மாறுதலுக்கு மனுப் பெறும் முகாம் நடைப்பெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். நில உடைமைப் பதிவுகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ஏற்பட்ட தவறுகள் திருத்தம் மற்றும் நத்தம் நிலவரித் திட்டத்தில் திருத்தம் ஆகியவற்றில் தீர்க்கப்படவேண்டிய கோரிக்கைகள் குறித்து எதிர் வரும் 22.09.2021 அன்று காலை 11.00 மணியளவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வாளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் சிறப்பு பட்டா மாறுதல் கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் நடைபெற உள்ளது.
எனவும், அது சமயம் மேற்கண்ட நில உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள உரிய ஆதார ஆவணங்களுடன் மனு செய்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.