திருவண்ணாமலை, ஜூலை.29-
திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன் வழிகாட்டுதலின் பேரில் திருவண்ணாமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சிவபாலன் தலைமையில் நேற்று உணவு வியாபாரிகள் புகையிலை, பான்மசாலா, குட்கா ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
அதில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் பங்கேற்று குட்கா மற்றும் உடல் கெடுக்கும் புகையிலை பொருட்களை இனி விற்பதில்லை என உறுதிமொழியேற்றனர். அப்போது உணவு வணிகராகிய ஒருவர் தமிழக அரசின் உத்தரவின்படி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோட்டினை சேர்க்கப்பட்ட பொருளாக கொண்ட குட்கா, பான்மசாலா, மற்றும் மெல்லும் புகையிலை பொருட்களை உபயோகப்படுத்தும் போது வாய்புண் குடற்புண் மற்றும் புற்று நோய் போன்ற உடல் பாதிப்புகள் ஏற்படும் எனவும் இறுதியாக உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொண்டேன். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோட்டின் சேர்க்கப்பட்ட பொருட்களாக குட்கா, பான்மசாலா மற்றும் வேறு எந்த சுவைக்கும் பொருட்களை தயாரிக்கவோ வாகனங்களில் எடுத்துச் செல்லவோ விநியோகிக்கவோ சேமிக்கவோ மற்றும் விற்பனை செய்யவோ மாட்டேன் எனவும் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் நலன் காத்திட நானும் எனது நிறுவனத்தைச் சார்ந்த பணியாளர்களும் ஒத்துழைத்து உணவு வணிகம் புரிவோம் என உளமார உறுதி கூறுகிறேன். இவ்வாறு உறுதிமொழி ஏற்கப்பட்டது.