கும்பகோணம், நவ. 13 –
கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பயத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள குருபகவான் சன்னதியில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு மாலை குருபெயர்ச்சி விழா நடைபெற்றது.
குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாலை 6.22மணிக்கு பிரவேஷம் செய்தார். இதனால் இன்று காலை 6 மணி அளவில் தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு 11 அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் குருபகாவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு குருபெயர்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுற்றுப்புற கிராமத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் அரசு விதிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.