கும்பகோணம், நவ. 27 –

தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்தநாள் இன்று தமிழக முழுவதும் திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து வான வேடிக்கையுடன் பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்று காசி தியேட்டரில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடையில்  மூன்று மதத்தினர் சேர்ந்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

நிகழ்ச்சி தொடக்கமாக மூன்று மாற்றுத்திறனாளி  பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் 4 சலவை தொழிலாளர்களுக்கு நான்கு இஸ்திரி பெட்டி மற்றும் ஆதிதிராவிடர் கல்லூரி விடுதிக்கு 146 பெட் சீட்டுகளை மாநகர செயலாளரும் மாநகர துணை மேயர்மானா சு.ப தமிழழகன் தலைமையில் வழங்கப்பட்டது.

இதில் மண்டல தலைவர் ஆசைத்தம்பி மாநகராட்சி துணைச் செயலாளர் சசிகுமார் மாநகர பொருளாளர் ரவிச்சந்திரன் அவைத் தலைவர் வாசுதேவன் மாமன்ற உறுப்பினர்கள் ஆனந்த் ராமன் முருகன் தமிழ்செல்வி செல்வராஜ் பொதுக்குழு உறுப்பினர் கவிதா மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here