குத்தாலம், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
காளி அசுரனை வதம் செய்யும் காளி ஆட்ட நிகழ்ச்சி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் நடைபெற்றது, வீடுகள் தோறும் மாவிளக்கு படையல் இட்டு பக்தர்கள் பயபக்தியுடன் அம்மன் வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் எழுந்தருளியிருக்கும் மகாகாளியம்மன் திருநடன வீதியுலா காட்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த 14ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய இவ்விழா, இன்று கோவிலில் இருந்து காளியம்மன் திருநடன உற்சவமனது புறப்பட்டு பிறந்த இடத்திற்கு சென்றது அதனைத் தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக நாயக்கர் தோட்டத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தினை சென்றடைந்தது.
பக்தர்கள் வீடுகள் தோறும் மாவிளக்கு படையல் இட்டு வழிபாடு செய்தனர் அத்திருநடன உற்சவமானது ஒன்பதாம் நாள் மீண்டும் கோவிலை வந்தடைந்து நிறைவு பெறும். மேலும் வருகிற 3 தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளதென்பது குறிப்பிடத்தக்கதாகும்.