திருவாரூர், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்…
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருக்கண்ணமங்கை அருள்மிகு அபிஷேகவல்லி சமேத பக்தவச்சல பெருமாள் ஆலய திருத்தேரோட்டம், வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
108 வைணவ திருப்பதிகளில் 27- வது ஷேத்ரமாக விளங்கும் , திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் ஆலயம் திருமங்கையாழ்வார் மங்களா சாசனம் செய்யப்பட்டதாக தல வரலாறு தெரிவிக்கிறது.
மேலும் இவ்வாலயத்தில் சித்திரை பிரம்மோத்ஸ உற்சவத்தில் முக்கிய விழாவான திருத்தேரோட்டம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூமிதேவி மற்றும் ஆண்டாள் நாச்சியாருடன் பெருமாள் திருகல்யாணகோலத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்யப்பட்டு, தீபாரதனை நடைப்பெற்றது.
தொடர்ந்து கோவிந்தா கோபாலா என்ற சரண கோஷத்துடன் தேர் வடம் பிடிக்கப்பட்டது. ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்தனர். கீழ வீதியில் உள்ள தேரடியில் இருந்து புறப்பட்ட தேரானது நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தது.























