மீஞ்சூர், மார்ச்.09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுகச் செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் ஆணைப்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த நாளினை முன்னிட்டு, தெருமுனை பிரச்சாரம் கூட்டம் மீஞ்சூர் பகுதிக்கு உட்பட்ட மூன்று இடங்களில் நடைபெற்றது.
மேலும் அக்கூட்டத்திற்கு மீஞ்சூர் நகர கழக செயலாளர் க.சு.தமிழ்உதயன் தலைமை வகிக்க, பேரூராட்சி மன்றத் தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத் தலைவர் அலெக்சாண்டர், அவை தலைவர் ராஜேந்திரன், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
அக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை கழக பேச்சாளர் உடுமலை தண்டபாணி கலந்துக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழக மக்களுக்காக பல்வேறு சிறப்பு மிகு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக அப்போது தெரிவித்தார்.
அதில் குறிப்பாக மாணவர்கள் பயன்பெறும் அளவிலான காலை உணவு திட்டம், குடும்ப பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் வாழ்த்தும் அளவிலான திட்டங்கள் தற்போது மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிவுள்ளதுக் குறித்து மிக விளக்கமாக பேசினார்.
அக்கூட்டத்தில் மீ.வி.கோதண்டம், மணிமாறன், வா.மோகன், சசிகுமார், தன்ராஜ், மில்லர், கர்ணா, அனஸ், ரஜினி, ஜெயலட்சுமி, முப்புராஜ், குமார், தமிழ், உள்ளிட்ட மாவட்டம், ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் பிறஅணி பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்களும் மேலும் திரளான கட்சித் தொண்டர்களும் அதில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் 3 ஆண்டு சாதனைகள் விளக்க அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை அப்பகுதி மக்களுக்கு அக்கட்சியினர் வழங்கினார்கள்.






















