ஆவடி, டிச. 03 –
சென்னை ஆவடி அருகே தனியார் கல்லூரியில் தேசிய மாசுகட்டுபாடு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாணவர்களுக்கு, இயற்கையை பாது காப்போம் என்பதை வலியுறுத்தும் விதமாக மஞ்ச பை மற்றும் மரக்கன்றுகளை வழங்கப்பட்டது.
தேசிய மாசுகட்டுப்பாடு தினத்தை முன்னிட்டு, பட்டாபிராமில் உள்ள ஹிந்து கல்லூரியில் மாசுகட்டுப்பாட்டு வாரிய சென்னை மண்டலம் மற்றும் ஊறுணி தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்று சூழல் இணை தலைமை பொறியாளர் வாசுதேவன், மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் ரகுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு இயற்கையை பாது காப்பதின் முக்கியம் குறித்து எடுத்துரைத்தனர்.
இதனை தொடர்ந்து மாசுகட்டுபாடு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தும் விதமாக மீண்டும் மஞ்சப்பை என்ற வாசகம் அடங்கிய துணி பைகள் மற்றும் மரக்கன்றுகளை நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் கல்விக்கரசி, கல்லூரி இயக்குனர் ராஜேந்திர நாயுடு, பேராசிரியர்கள், மற்றும் திரளான கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





















