காஞ்சிபுரம், ஆக. 07 –
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள எல்லப்பா நகர் பகுதியில் அமைந்துள்ளது யுரோ கிட்ஸ் மழலையர் பள்ளி இப்பள்ளி கடந்த ஆறு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர பொன்விழா 75 ஆம் ஆண்டு பெருவிழா கொண்டாடபடவுள்ள நிலையில், நாடு முழுவதும் வீடுகள் தோறும் கொடியேற்றி கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்டு 12 அடி அகலமும், 32 அடி நீளம் கொண்ட தேசிய கொடியின் வர்ணங்களை 4 வயதுக்குபட்ட குழந்தைகள் தங்கள் பிஞ்சு கைகளில் வர்ணங்களை கொண்டு உள்ளங்கை அச்சு பதிவு ( Palm print) மேற்கொண்டு கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் முயற்சி செய்து சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.
இதுகுறித்த அறிவிப்பு வெளியானதும் ஆசிரியர்கள் , குழந்தைகள் , தன்னார்வலர்கள் என அனைவரும் மகிழ்ச்சியுடன் வந்தே மாதரம் , ஜெய்ஹிந்த் என முழக்கம் எழுப்பி மகிழ்ந்தனர். கலந்துக் கொண்ட அனைத்து மழலையர்களும் பங்குபெற்ற தற்கால சான்றிதழ்களை வழங்கினர்.
இந்நிகழ்வு குறித்து கலாம் சாதனை புத்தக மேற்பார்வையாளர் Dr. ஹரிஷ் கூறுகையில் , நூற்றுக்கும் மேற்பட்ட மழைலையர்கள் பங்கேற்று இச்சாதனை மேற்கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் , தேசிய கொடியினை உருவாக்கி மகிழ்ந்தது அவர்களால் மறக்க இயலாது என தெரிவித்தார்.
பள்ளி நிர்வாகி பத்மப்பிரியா தெரிவிக்கையில் , இளம் வயது முயற்சி அவர்களது தன்னம்பிக்கையும், இதுப்போன்ற சாதனை முயற்சியும் தொடர இது வாய்ப்பாக அமையும் என தெரிவித்தார்.