கும்பகோணம், மார்ச். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போதை பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வு உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அனுமதியின்றி நடைப்பெற்ற அப்போராட்டத்தில் பங்குப் பெற்றவர்களை கைது செய்தனர்.
தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின், எதிர்காலம் சீரழிந்து வருவதாக தெரிவித்து, மேலும் போதை பொருள் கடத்தலால், இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கு தி.மு.க.வே காரணமெனக்கூறி, தமிழ்நாடு அரசைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் அனுமதி இன்றி விழிப்புணர்வு உண்ணாவிரதம் போராட்டத்தை காந்தி பூங்கா எதிரில் அக் கட்சியின் மாவட்ட தலைவர் சதீஷ்குமார், தலைமையில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அதில் வழக்கறிஞர் அணி பார்வையாளர் வழக்கறிஞர் சுரேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் அண்ணாமலை, ஒன்றியத் தலைவர்கள் நவநீதன், செந்தில்குமார், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் கும்பகோணம் மாநகர காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.




















