மயிலாடுதுறை, ஏப். 17 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…

செப்பேடுகள் கிடைத்த நந்தவனம் பகுதியில் திருமுறை ஈன்ற தெய்வத் தமிழ்மண் என்ற இடத்தில் தேவாரப் பாடசாலை மாணவர்களால்  தேவாரப் பதிகங்கள் பாடப்பட்டு, சிவாச்சாரியார்களால் சிறப்பு வழிபாடு, பூஜைகள். நடைப்பெற்றது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைய வாய்ந்த சட்டநாதர் கோவில் அமைந்துள்ளது. மேலும் அத்திருகோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதற்காக  கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி யாகசாலை மண்டபம் அமைப்பதற்காக கோயில் மேற்கு கோபுர வாயில் அருகே நந்தவனத்தின் உட்புறத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோன்டிய போது மண்ணில்  புதைந்திருந்த ஐம்பொன் சிலைகளான விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, சோமஸ் கந்தர், அம்பாள், பூர்ண புஷ்கலா அய்யனார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 22 ஐம்பொன் சிலைகளும், 55 பீடங்கள், பூஜை பொருட்கள் மற்றும் சீர்காழியில் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பதிகம் தாங்கிய தேவார செப்பேடு 462 ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.

ஐம்பொன் சுவாமி சிலைகள் மற்றும் தேவாரப் அதிக செப்பேடுகள் கோயில் பள்ளியறை அருகே பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே இன்று தேவாரப் பதிகம் செப்பேடுகள் பொக்கிஷங்கள் கிடைத்த முதலாம் ஆண்டு தினத்தை  முன்னிட்டு கோயில் நந்தவனம் பகுதி செப்பேடுகள் கிடைத்த இடத்தில்  கோயில் கட்டளை ஸ்ரீமத் சட்டநாதன் தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் பாடசாலை மாணவர்கள் தேவாரப் பதிகங்கள் ஓதிட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

தொடர்ந்து  புனித நீர்  அவ்விடத்தில் ஊற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.  இதில்  தமிழ்ச்சங்கத் தலைவர் மார்கோனி, இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், முரளி,கோயில் கணக்கர் செந்தில், கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் பலர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here