மீஞ்சூர், ஏப். 12 –

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் வசிப்பவர் பாசவதி என்பவர் இவர் கடந்த 25 ஆண்டுகளாக செவிலியர் பணி செய்து வருகிறார். இதற்கிடையில் இவருக்கு FMES forum medical ethical society மற்றும்  INDIAN JOURNAL OF MEDICAL ETHICS (IJME). என்ற அமைப்பும் சேர்ந்து சிறந்த நெறிமுறையாளருக்கான விருதை பாசவதி அவர்களுக்கு வழங்கியது.

பாசவதி அவர்கள் கொரோனா காலகட்டத்தில் நரிக்குறவர்களுக்கும் மற்றும் மலைவாழ் இனமக்களுக்கும் சிறந்த சேவைகளையும் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களையும் வழங்கி அவர்களுக்கு நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி  என்பது குறித்து வழிமுறைகளை வழங்கி அவர்களுக்கு சேவை செய்துள்ளார்.

இதனடிப்படையில் செவிலியர் பாசவதிக்கு இந்த விருது பரிந்துரைக்கப்பட்டது. இந்திய அளவில் சிறந்த செவிலியர் என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது. இதனை பாராட்டும் வகையில் மீஞ்சூர் பகுதியில் உள்ள வியாபார சங்க நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொழில்துறை நிறுவனத் தலைவர்கள் இவர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here