கும்பகோணம், ஏப். 08 –
மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு காப்பீட்டுத்தொகைகளை உடனே வழங்கக்கோரி கும்பகோணம் அருகே கபிஸ்தலம், பேங்க் ஆப் இந்தியா வங்கி முன்பு விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில் கவனயீர்ப்பு முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாசன சங்கம் சார்பில் பேங்க் ஆப் இந்தியா வங்கி முன்பு பேங்க் ஆப் இந்தியா வங்கி மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கு காப்பீட்டு எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி அதனடிப்படையில் தனியார் காப்பீடு நிறுவனத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் கடன் பெறும் போது எல்லாம் காப்பீடு எடுத்து இருந்தனர். அந்த காப்பீடு தற்பொழுது முடிவடைந்துள்ள நிலையில் முதிர்வு தொகை முழுமையும் தரமறுத்தும், ஒவ்வொரு குழுவினருக்கும் தனித்தனியாக காப்பீட்டில் ரசீது வழங்க மறுக்கும் தனியார் காப்பீட்டு நிறுவனத்தை கண்டித்தும் அதற்கு துணை போகும் கபிஸ்தலம் பேங்க் ஆப் இந்தியா நிறுவனத்தின் கிளையை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம் நடைப்பெற்றது.
மேலும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கபிஸ்தலம் பேங்க் ஆப் இந்தியா கிளையில் பல கோடி ரூபாய் போலி நகை அடகு முறைகேட்டில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளர் மீது பலமுறை பலகோடி ரூபாய் மோசடி தொடர்பான தொடர் நடவடிக்கைனை பேங்க் ஆப் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தாமல் இருப்பதை கண்டித்தும், இந்த கவனயீர்ப்பு முழக்க ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த வளர்மதி, புனிதா ஆகியோர் தலைமையில் நடைப்பெற்ற. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் சுந்தர விமலநாதன், மாவட்ட தலைவர் சின்னதுரை, துணைத்தலைவர் பிரகாசம், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மேலும், மகளிர் சுய உதவிக்குழுவினர், மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.




















