பூண்டி, பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம் பூண்டியில் அமைந்துள்ள மாதா பேராலயத்தில் கிறிஸ்தவா்களின் தவக்காலம் துவங்கியது. அதனை முன்னிட்டு பேராலயத்தில் நடைப்பெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுக் கூரும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவா்கள் 40 நாட்கள் தவக்கால திருநாளாக கடைப்பிடித்து வருகின்றனா்.
அதன்படி, நிகழாண்டுக்கான தவக்காலம் சாம்பல் புதனாக கடைப்பிடிக் கப்பட்டு புதன்கிழமையான இன்று தொடங்கியது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த பூண்டி மாதா பேராலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற சாம்பல் புதன் நிகழ்ச்சியில், அருள் தந்தையர்கள் சாம்சன் , ரூபன் அந்தோணி ராஜ், ஆல்பர்ட் சேவியர், தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்ந்து பங்குத்தந்தையா்கள், இறைமக்கள் நெற்றியில் சாம்பலால் சிலுவையிட்டனா். தவக்கால நாட்களில் வெள்ளிக்கிழமை தோறும் மாலையில் சிலுவைப் பாதை நடைபெறும் என்பதுகுறிப்பிட தக்கதாகும்.























