திருவாரூர், செப். 17 –

திருவாரூர் மாவட்டம், மேட்டுபாளையம் சமுதாய கூடத்தில் வன்னியர் சங்க மாநில துணை தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நீதி போரில் உயிர் நீத்த 21 போராளிகளின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

இந்நிகழ்வில் வன்னியர் சங்க வடக்கு மாவட்ட தலைவர் கார்த்தி,  பாமக வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவக்குமார், வன்னியர் சங்க முன்னாள் மாநில துணை தலைவர் நிம்மேலி மனோகரன், மற்றும் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர் கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கடந்த 1987 இல் வன்னிய இன மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த 21 பேர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் அவரது திருவுருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்டம் மற்றும் நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

பேட்டி.  சிவசுப்பிரமணியன் (வன்னியர் சங்க மாநில  துணை தலைவர்)

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here