தேனி முல்லை நகரில் இயங்கி வரும் வி.கே.ஜி. கருணை இல்லம் என்ற அமைப்பிற்கு எழுத்தாளர் எஸ்.மாரியப்பன் குளிர்சாதனப் பெட்டியை பரிசாக வழங்கினார்.
தேனி ,ஜூலை,8-
தேனி அரண்மனை புதூர் முல்லை நகரில் அமைந்துள்ள வி. கே. ஜி. கருணை இல்லத்திற்கு எழுத்தாளர் தேனி எஸ். மாரியப்பன் புதிய குளிர் சாதன பெட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் அப்பகுதியின் பிரமுகர்கர்கள் பொதுமக்கள் மற்றும் ஒய்வுப் பெற்ற அரசுத் துறை அலுவலர்கள் பொதுமக்கள் என்று ஏராளம் பேர் பங்கேற்றனர். அவர்களை கருணை இல்லத்தின் நிர்வாகி அல்லி ராணி வரவேற்றார். பின்பு நடைப்பெற்ற நிகழ்ச்சியில் எழுத்தாளர் மாரியப்பன் குளிர்சாதனப் பெட்டியை அமைப்பிற்கு பரிசாக அளித்தார் . அதனை கருணைஇல்ல நிர்வாகி அல்லிராணி பெற்றுக் கொண்டார். உடன் அறக்கட்டளை தலைவர் சிதம்பரம் கல்வித்துறை கண்காணிப்பாளர் (ஓய்வு) நாகராஜன் மாவட்ட நீதிமன்ற இலவச சட்ட ஆலோசனை மைய வழிகாட்டி ஆறுமுகம் (ஓய்வு) ஐஸ்வர்யா காமராஜ்.. பூசாரி ராதா. ஆன்மிக செயல்பாட்டாளர் அழககேந்திரன்.ராம்ஜீ, ட்ரஸ்ட் நிர்வாகி வெங்கிடபூபதி, ராஜேஸ் கண்ணன்,இராணுவ வீரர் முரளிதரன், திருச்சி கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கருனை இல்லத்திற்கு பிரிட்ஜ் வழங்கிய எழுத்தாளர் மாரியப்பனை அனைவரும் பாராட்டினார்கள்.