திருவள்ளூர், ஏப். 11 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

இந்திய ஜனநாயகம் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதால் அதை காப்பாற்ற ராகுல் காந்தி ,ஸ்டாலின் இரு டாக்டர்கள் நாட்டிற்கு தேவை என திராவிட கழக தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சிறப்புரை நிகழ்த்திய பொதுக்கூட்டம் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்றது.

அக்கூட்டத்தில் பேசிய அவர் …

தமிழகத்தில் மோடி முகாம் போட்டு தங்கினாலும்  வெல்ல போவது இந்தியா கூட்டணிதான் என்றும் மோடி திரிச்சூலம் வைத்து மிரட்டி   மோடிக்கு எதிரானவர்களை வருமானத்துறை,  அமலாக்கத்துறை , சி.பி.ஐ   சோதனை செய்வதாகவும். துணை சபாநாயகர் பதவியை மோடி  நிரப்பாமல்  ஜனநாயகத்தை படுகொலை செய்திருப்பதாகவும்., மேலும் இளைஞர்களுக்கு வேலை கேட்டால் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கையில் வேல் கொடுத்து மோடி அனுப்பி வைப்பதாகவும், வாடகையாளர்   மினிமம் பேலன்ஸ் மூலம் வங்கியில் இருந்து 21 ஆயிரம் கோடி சுருட்டியவர் மோடி எனவும், மேலும் மோடி ஊழல் தலை மீது வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் ஊழல் பற்றி பேசுகிறார்.

அவருக்கு ஊழல் பற்றி பேச என்ன இருக்கு என்றார். ஏப்ரல் 19 ந் தேதி வாக்கு இயந்திரத்தில்  பச்சை விளக்கு எரிகிறதா என பார்த்து வாக்களிங்க அப்போதுதான் உங்கள் அனைவரின் வீட்டில்  விளக்கு எரியும் என்றார். மோடி பொய்  தொழிற்சாலையாக  செயல்பட்டு வருவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here