திருவாரூர், ஜன. 13 –
திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உற்சாகமாக மாட்டு வண்டி ஓட்டி வந்து இந்நிகழ்வில் பங்கேற்றார்.
உலகம் முழுவதும் பொங்கல் திருவிழா களைகட்டி வருகின்ற நிலையில், திருவாரூர் மாவட்ட காவல் துறை சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் இன்று,
பொங்கல் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் பொங்கல் வைத்து இயற்கைக்கு படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சட்டை அணிந்து கொண்டு, உற்சாகமாக மாட்டு வண்டியினை ஒட்டி அசத்தினார்கள்.
மேலும், காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கயிறு இழுக்கும் போட்டியும் மற்றும் உரியடி போட்டியும் நடைப்பெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் என இரு பிரிவினருக்கும் தனித்தனியாக இப்போட்டி நடைப்பெற்றது.
மேலும் இவ் விழாவில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை உள்ளிட்ட ஏராளமான காவலர்கள் குடும்பத்துடன் பங்கேற்று விழா சிறப்பாக அமைய பங்காற்றினார்கள்.



























