திருவாருர், செப். 04 –
திருவாரூரில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகர் முழுவதும் பிரதிஷ்டை செய்து வழிபாடு வந்த சிலைகளும் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சுமார் 60க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளும் எடுத்து வரப்பட்டு, அனைத்து சிலைகளையும் திருவாரூர் நகரின் முக்கிய பகுதியில் இருந்து, வேளாக்குறிச்சி ஆதினம் மற்றும் வர்த்தக நல சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.கே.கே. ராமமூர்த்தி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைக்க ஊர்வலம் புறப்பட்டது.
இவ்வூர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஆயிரக்கணக்கான காவல்துறையினரின் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டது. இந்நிகழ்வில் 6000 திற்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் கலந்து கொண்டு இரவு சரியாக 10.40 மணி அளவில் ஓடும்பக்கி ஆற்றில் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்தனர்.