தஞ்சாவூர், மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், சடையார்கோவில், அருமலக்கோட்டை, , ஆர்சுத்திப்பட்டு, நார்த் தேவன் குடிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சித்திரை பட்டமாக உளுந்தினை அப்பகுதி விவசாயிகள் பயிர் தெளித்து உள்ளனர்.
இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கோடை மழை காரணமாக அப்பகுதியில் உள்ள சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட உளுந்து பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இலைகள் துளிர் விட்டு வரக்கூடிய நேரத்தில் மழை பெய்ததால் பாதிப்பு ஏற்பட்டு சுமார் 40 சதவீதம் அளவிற்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள், தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மகசூல் பெருக்க ஆலோசனை வழங்க வேண்டும் என மேலும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Byte
ராஜேஸ், விவசாயி அருமலக்கோட்டை





















