தஞ்சாவூர், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் குழு சார்பில் ஆண்டு தோறும் மேட்டூர் அணையை திறக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது.
அதுப்போல் இந்தாண்டு மேட்டூர் அணை பாசன பகுதி, பயிர் சாகுபடியும், நீர் வழங்கல் திட்டமும் பரிந்துரைகளை தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளது.
அதன்படி தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் கலைவாணன் கூறுகையில், நடப்பு ஆண்டு குறுவை சாகுபடி செய்வதற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கிடைக்க சாத்தியக்கூறு இல்லை எனவும் மேலும் ஒரு போக சாகுபடிக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு பிறகு மேட்டூர் அணையை திறக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் தண்ணீர் பெறுவதற்கு தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் எனவும் மேலும் பாசன நீர் திறனை உயர்த்த வேண்டும் எனவும் மேலும் ஆறுகள், வாய்க்கால்கள் தூர் வாருவதை போல் சி & டி பிரிவு வாய்க்கால்களை தூர் வார வேண்டும் எனவும், மேலும் அதுப்போன்று விவசாய பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி போதாது என்றும் மேட்டூர் அணையை ஆகஸ்ட் 15 க்கு பிறகு திறந்தால் ஒரு போக சாகுபடியை சிக்கனமாகவும், பாதுகாப்பாகவும் செய்ய முடியும் என்று அவர் கூறினார். அந்நிகழ்வின் போது மூத்த வேளாண் வல்லுநர்கள் பழனியப்பன், கலியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
பருவமழை பொய்த்து போனதால் ஆறுகள் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து கடல் நீர் உள் வந்துள்ளாதால் ஆழ்குழாய் பாசனம் மூலம் நெல் சாகுபடி செய்வதற்கு பதிலாக எள், கடலை, உளுந்து போன்ற மண் வளத்திற்கு ஏற்ப பயிர்களை சாகுபடி செய்யலாம் என விவசாயிகளுக்கு மூத்த வேளாண் வல்லுனர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
மூத்த வேளாண் வல்லுனர் குழுவினர் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேட்டி அளித்த மூத்த வேளாண் வல்லுனர் கலைவாணன், இயல்பாக மேட்டூர் அணை நீரை வைத்து இருபோகச் சாகுபடி செய்வது வழக்கமாகும்.
இந்த ஆண்டு டெல்டா மாவட்டஙகளில் இரு போக சாகுபடி செய்ய வேண்டாம். குறுவை சாகுடி செய்வதை தவிர்த்து. ஒரு போக சம்பா சாகுபடி செய்யலாம். என ஆலோசனை வழங்கினார்.
தஞ்சை மாவட்டத்தில் ஜுன் 1 முதல் ஆகஸ்ட் 15 வரை எந்த ரக நெல்லும் விதைக்க முடியாது. காரணம் பூபூக்கும் பருவத்தில் மழை காரணம் என்பதால் நெல் மகசூல் பாதிக்கும். ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு விதைப்பது நல்லது. நடப்பாண்டில் ஒரு போக சாகுபடிச்காக மேட்டூர் அணையை ஆகஸ்ட் 15 திறக்கும் படி தமிழக அரசை தஞ்சாவூர் மூத்த வேளாண் வல்லுனர் சங்கம் சார்பில் கேட்டு கொள்வதாக தெரிவித்தார்.
ஆழ்குழாய் பாசனம் மூலம் நெல்சாகுபடியை தவிர்த்து விட்டு எள், கடலை, உளுந்து போன்ற மண் வளத்திற்கு ஏற்ப சாகுபடி செய்ய வேண்டும் என கூறினார். கடந்த ஆண்டு மழையும் இல்லை. ஆற்றில் தண்ணீரும் இல்லை. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. கடல் நீர் உள் வந்து விட்டது. கடந்த ஆண்டு குறுவை கடைசி நேரத்தில், சம்பா தொடக்கத்தில் கடல் நீர் உள் வந்ததால் பயிர் கருகி விட்டதாக தெரிவித்தார். பாசனதாரர் சங்கம் அமைத்து சி.டி.எப் வாய்க்கால்களை தமிழக அரசு சீர் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பேட்டி: கலைவாணன், மூத்த வேளாண் வல்லுநர்





















