திருவாரூர், ஏப். 04 –

திருவாரூரவ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிராக நேற்று, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

அவ்வார்ப்பாட்டத்தில், ரேஷன் கடை பணியாளர்களின் பிரச்சினைகளை கண்டறிய குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடன் தள்ளுபடியில் விதிமீறல்,  நகை ஏல நடவடிக்கையில் நஷ்டம்  என்று கூறி பணியாளர்களின்  ஓய்வு காலநிதி பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை உடன்    விடுவிக்கப்பட வேண்டும்.

மேலும், பயிர் கடன் நகை கடன் மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடிக்கு உரிய தொகையினை  வட்டியுடன் முழுமையாக  வழங்க வேண்டும்

செயலாளர் பொதுப்பணி நிலைத்திறன் எங்களது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டவர்கள் கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here